Poems 2006
------------
கத்தி இல்லை ரத்தம் இல்லை
மாயம் இல்லை காயம் இல்லை
உன் வார்த்தை கணைகள்
கொன்று விட்டன என்னை!!!
பிறகெப்படி நடக்கிறேன் நான்?
ஓ, என்னை தான் சொன்னார்களோ,
நடை பிணம் என்று????

--------------------
திசை தெரியாமல் பறந்து திரிந்த
இந்த சின்ன குயிலை
உன்மனச் சிறையில் அடைத்து எது?
புயலுக்குபின் அமைதி தெரியும்..
உன் அமைதிக்கு பின் எந்த புயலோ?
என் ஏக்கப் பெருமூச்சுகள் 
என்னை எரித்து கொள்ளுமுன்
என்னுடன் பேசிவிடு..

----------------------
உறங்காத இரவுகள் உண்டு
உன்னோடு இருந்த பொழுது
உணர்வற்று இருந்த பொழுதுகள் உண்டு
உன்னோடு இருந்த பொழுது
கலையாத கனவுகள் உன்டு
உன்னோடு இருந்த பொழுது
அத்தனையும் மறைந்து போனது
அவள் போனவுடன்
இது கூட ஒரு சுகம் தான்
இனி வேண்டாம் அவள்....

-------------------
ஆழியும் வந்தது
அடை மழையும் பொழிந்தது
நீரும் பெருகியது
நீயும் விலகினாய்
நானோ நெருங்கினேன்
நயமாய் ஒதுங்கினாய்
கண்டுகொண்டேனடி உன்னை
கவலை வேண்டாம்
காதலுக்கு மரியாதை
கண்டிப்பாக கொடுத்திடுவேன்
கலங்க வேண்டாம்
காதலன் கைப்பற்றி
கணவணாய் உருமாற்றி
தமிழ் மண் மீது
கால் பதிக்கும் நேரமதை
வெற்றி விழாவாய் கொண்டாட
உனக்கு முன்னே ஒடி வந்து
குருதி கம்பளம் விரித்து
குற்றுயிறாய் கிடக்கிறேன்
என் மேது ஏறி சென்றேனும்
காதல் அரியணை ஏறிடு