English

தமிழில் கணணி

ஆரம்பத்தில் பாமினி போன்ற தாய் மொழியான தமிழ் மொழியை மாத்திரமே உட்புகுத்தக்கூடிய ஒருமொழிக் குறியீட்டுமுறை (monolithic encoding) அறிமுகமானது. பின்னர் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒரே எழுத்துருவில் (font) உருவாக்கக்கூடிய TSCII (Tamil Standarad Code for Information Interchnge) தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டுமுறை அறிமுகம் ஆனது. இதுவும் ASCII (Amrican Standarad Code for Information Interchage) அமெரிக்கரின் தகவற் பரிமாற்றத்திற்கான நியமக்குறியீட்டு முறையைப்போலவே. முதலில் ஆங்கிலமும் பின்னர் தமிழும் கொண்டுவர்ப்பட்டன. இதில் தமிழை உட்புகுத்துவதற்காக விசேட மென்பொருட்கள் அறிமுகம் ஆகின. இவற்றில் மிக முக்கியமானது நளினம் என்னும் மென்பொருள். TSCII ஓரளவு காலம் நிலைத்து இருந்தாலும் உலகில் பலமொழிகள் இருந்ததால் யுனிக்கோட் (UNICODE) என்னும் ஒவ்வோர் மொழிக்க்கும் ஓரிடம் என்றவாறு உலகின் பிரதான மொழிகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டது. தமிழ் விண்டோஸ் 2000 பதிப்பிலிருந்தே அறிமுகம் செய்ப்பட்டது. இப்பக்கமானது இப்போது உருவாகப் படுகிறது