தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

 

மூவந்தரும் அற்றுச்
    சங்கமும் போய் பதி
        மூன்றொரு எட்டுக்
கோவேந்தரும் அற்று
    மற்றொரு வேந்தர்
        கொடையும் அற்றுப்
பாவந்தர் காற்றில்
    இலவம் பஞ்சாகப்
        பறக்கையிலே
தேவேந்திரத் தாரு ஒத்
    தாய் ரகுனாத
        செய துங்கனே


        -படிக்காசுப் புலவர்
 

தமிழ்ச் சங்கம்                    இராமநாதபுரம்
தோற்றம்                                 30-06-1895
பதிவு பெற்றது                      20-02-2000
பதிவு எண்                               20/2000
நிறுவுனர்                                 முனைவர் சே.மு.கமால்  
மூவேந்தர்கள் காலம் முடிந்தபின் தமிழுக்குத் தொண்டாற்றிய பெருமையைத் தன்னிடத்தே தக்க வைத்துக் கொண்ட ஒரே தமிழ்ப் பூமி இந்தச் சேது பூமி.

மாத் தடங்கண்ணியை விசாலாட்சி என்றும், அங்கயற் கண்ணியை மீனாட்சி என்றும் மாற்றத் தொடங்கிய கால கட்டங்களில் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்த சேது காவலர்கள் ஆண்ட பூமி இச்சேது பூமி.

முத்தமிழ் வளர்த்து முச்சங்கமும் கண்ட மா மதுரையிலேயே திருக்குறள் பத்தகம் கிடைக்காத அவலம் கொண்ட காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித் துரைத் தேவரைப் பயந்த பூமி இச் சேது பூமி.

பாரத தர்மத்தைப் பாருக்கு பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய பாஸகர சேதுபதியின் கொடைத் திறம் கொண்ட பூமியும் இச் சேது பூமியே.

ஆங்கிலரின் வரலாற்றுப் பதிவேடுகளைத் தட்டிப் படித்துப் படித்து சேது மன்னர்களின் வரலாற்றையும் மண்ணின் மகிமைகளையும் பற்றிப் பதினாறு பத்தகங்களுக்கு மேல் எழுதி மறைந்த மாமேதை, சேது நாட்டின் வரலாற்று ஆசிரியர் டாக்டர் திரு.சே.மு.கமால் அவர்களால் இந்தத் தமிழ்ச் சங்கம் 1985-ம் ஆண்டிலேயே தொடங்கப் பட்டு திங்கள் தோறும் இன்று வரை கூட்டங்கள் நடத்தித் தன் தமிழ்ப் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.

இச் செந்தமிழ்க் கப்பல ஒருமீகாமனின் இலாவகத்தோடும் திறமோடும் செலுத்தி எங்கள் கைகளில் ஒப்படைத்துவிட்டு இந்த ஆண்டு(2007)  எங்களை விட்டுப் பிரிந்து இறைஅடி சேர்ந்த மண்ணின் மகா மைந்தனின் திருவடி மலர்களுக்கு இந்த இணைய தளத்தை அர்ச்சனையாய் சமர்ப்பிக்கிறோம், அவர்தம் நல் ஆசி மழையில் நனைந்து கொண்டே.
 

                              -தமிழ்ச் சங்கத்தினர்
                               இராம நாத புரம்

Email :  tamizhsangam@yahoo.com