தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

மூவந்தரும் அற்றுச்
    சங்கமும் போய் பதி
        மூன்றொரு எட்டுக்
கோவேந்தரும் அற்று
    மற்றொரு வேந்தர்
        கொடையும் அற்றுப்
பாவந்தர் காற்றில்
    இலவம் பஞ்சாகப்
        பறக்கையிலே
தேவேந்திரத் தாரு ஒத்
    தாய் ரகுனாத
        செய துங்கனே
        -படிக்காசுப் புலவர்
 

தமிழ்ச் சங்கம்                    இராமநாதபுரம்
தோற்றம்                                 30-06-1895
பதிவு பெற்றது                      20-02-2000
பதிவு எண்                               20/2000
நிறுவுனர்                                 முனைவர் சே.மு.கமால்  
செந்தமிழ் வளத்த சேதுபதி மன்னர்களது வழிநின்று சேதுச் சீமையில் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் சிறப்புச் சேர்த்து வருவதுதான் தமது தமிழ்ச் சங்கம் ஆகும்

ராமநாதபுரம் நகரில் ஆண்டுதோறும் தமிழ் விழாக்களைத் தவறாமல் நடத்தி, தமிழிக்கு உழைத்த தயாளர்களின் நினைவையும், பணியையும் போற்றி இளந் தலைமுறையினர்க்கும், மாணவ மாணவிகளுக்கும் இனம் காட்டி வருகிறோம்.

மேலும் பள்ளி மாணவ மாணவியருக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடற் போட்டிகள் நடத்திப் பரிசுகளும், பாராட்டிதழ்களும் வழங்கி அவர்களின் மொழிப் பற்றை ஊக்குவித்து வருகிறோம்.

இத்துடன் அனைத்து மக்களுக்கும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காக நமது இலக்கிய விழாக்களில் கவிஅரங்கம், கருத்தரங்கம், உரைஅரங்கம், நூல் வெளியீட்டரங்கம் ஆகியவைகளை அமைத்து வழங்கி வருகிறோம்

                      -எங்கள் நிறுமுனர்தம் எழுத்தில் இருந்து
                       சில வரிகள். . .

Email :  tamizhsangam@yahoo.com