|
மர்கடக பாபா திரு அனுமார் கோயில் - பழைய தில்லி
நிகம்போத் காட் ரிங்ரோட் என்று அழைக்கப் படும் சுற்று பாதையில் பயணித்தால் முழு தில்லியையும் ஒரு சுற்று வந்துவிடலாம். அனேகமாக பல சரித்திர புகழ் பெற்ற இடங்களையும், சின்னங்களையும் பார்த்துவிடலாம். உலகிலேயே உபயோகத்தில் இல்லாத மிக பெரிய கோட்டையாக கருதப்படும் செங்கோட்டை - தில்லியின் மிகவும் போற்றப் படும் சின்னங்களில் ஒன்று. பழைய தில்லி - ஷாஜகானாபாத் யமுனை நதி நிகம்போத் - பெயர் வந்த காரணம் யமுனா பஜார் மர்கடக பாபா அனுமார் கோயில் பிரதான சன்னதி மேற்கு நோக்கியுள்ளது. அனுமாரும் மேற்கு நோக்கியுள்ளார். சுமார் பதினைந்து அடி கீழே அனுமார் சிலை உள்ளது. நாளடைவில் ரோட் முதலின போடப்பட்டு இப்பொழுது பூமி இருக்கும் நிலை 15 அடி உயர்ந்துள்ளது. அனுமார் அன்று ஸ்தாபனம் செய்த இடத்திலேயே உள்ளார். மூன்று அல்லது நான்கு அடி உயரமுள்ள புடைப்பு சித்திரமாக அனுமாரின் சிலை உள்ளது. வட இந்திய பழக்கப் படி அனுமார் செந்தூரத்தில் திளைக்கிறார். அனுமாரை சுற்றி சுனை நீர். என்ன மழையானாலும், யமுனையில் வெள்ளம் வந்தாலும் இந்நீர் மட்டம் உயர்வது இல்லையாம். அனுமாரின் ஒரு கையில் கதை உள்ளது. மற்ற கை பூமியை தொடுவதுப் போல் உள்ளது. பழமையான இக்கோயில் எவ்வளவு தொன்மையானது என கூறுவது கடினம். முகலாயர்கள் காலத்தில் திரு மர்கடக பாபா இவ்வாஞ்சநேயரை கோயில் கட்டி வழிபட்டார் என்பது தான் முதலில் தெரியும் செய்தி. அனுமாரின் கோயில் இங்கு வர காரணம் பல கூறப்படுகிறது. கோயில் வர காரணம் முதலாவதாக (நடப்பில்) புழக்கத்தில் உள்ள புராணம், இராமாயண காலத்தை ஒட்டியது. அயோத்யா நகரவாசி ஒருவர் கூறிய சுடு சொல் தாங்காத இராமர், சீதாதேவியை நகரத்திலிருந்து வெளியில் அனுப்பி விடுகிறார். சீதை இல்லாத இராமர், சில நாட்களில் அனுமாருடன் பாரதத்தில் உள்ள பல புனிதத் தலங்களை வலம் வருகிறார். அப்படி நிகம்போத் காட் வந்த போது, யமுனையில் நீராடி இராமர் தியானம் செய்து மனம் மகிழ்ந்தார். பின் அனுமாரால் பறிக்கப்பட்ட பழங்களை புசித்தார். அனுமார் தன் அண்ணல் உண்ட மிச்சத்தை அமுதாக கருதி அதை புசித்தாராம். அக்காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறதாம் இங்குள்ள அனுமார் சிலை. இரண்டாவதாக முன்னே கூறிய மாதரி நான்முகன் வேதங்களை மீட்ட இடம் இது. சூரியனை குருவாக கொண்டு அனுமார் வேதங்களையும் வியாகரணங்களையும் கற்றார். அதுவும் சூரியனை வணங்கிய மாதரியே அவரை பார்த்த மாதரியே பின் பக்கமாக நகர்ந்து கொண்டே பாடங்கள் படித்தாராம் அதிசூரனான அனுமார். இருளைப் போக்கும் சூரியனால் மன இருளைப் போக்கும் நூல்கள் திரும்ப கிடைத்ததாக அனுமாருக்கு அடையாளம் காட்டப்பட்ட இடம் இது. சூரியனால் கூறப்பட்ட வேதம் மீட்ட இடமாகிய நிகம்போத் காட்டில் அனுமார் பூமியை தெட்டு வணங்கும் பாவனையில் அமைந்து இருப்பதாக கூறுவர். இச்சம்பவத்தையே சாம்பவான் வாயிலாக கம்பர் நயம் பட இப்படி கூறுகிறார் "போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா மகா கல்விமானாக அடக்கமே உருவான அனுமார் தன்னையே இராமருக்கு அளித்திட்டவர். இராமர் இல்லாமல் தான் இல்லை என்பவர் அவர். இராம நாமத்தை உலகினில் பரப்ப வந்தவர் அனுமார். இராமரின் ஒவ்வொரு அசைவிலும் ஆனந்தத்தை அனுபவிப்பவர் அவர். அப்படிப்பட்ட அனுமாரை வணங்கினால் நமக்கு கல்வியும், அடக்கமும், இராமரின் அருளும் சேர்ந்து கிட்டும் என்பதில் ஓர் ஐயமும் வேண்டாம். ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
சிவ ஒளி மாதஇதழில் (டிசம்பர் 2008) வெளிவந்துள்ளது காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |