![]()
முதன் முறையாக இப்படி ஒரு புத்தகம் தாங்களுக்காகவே
நாங்கள் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ஹநுமத் ஸஹஸ்ரநாமம்" புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் : 01. அனுபவம் மிக்க பண்டிதர்கள் பலர் (பார்க்க பக்கம்
vi) இந்த 02. ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸஹஸ்ரநாம 'ஸ்தோத்ரம்' ஸம்ஸ்கிருதம் மற்றும் 03. உச்சாரணப் பிழை தவிர்க்க ஒலிக்குறி விளக்கம், 04. முதல் முறையாக ஒவ்வொரு நாமாவிற்கும் தமிழ் அர்த்தம், 05. படிக்க வசதியாக இருக்க 1000 நாமாவளிகள் இருமொழியிலும் தனித்தனியாக, 06. முதல் முறையாக அஷ்டோத்திர நாமாவளிக்கு விரிவுரை, 07. வழக்கத்தில் உள்ள ஸஹஸ்ர, அஷ்டோத்திர நாமாவளிகளின் பாடபேதங்கள், 08. பெரிய, அழகிய எழுத்துகளின் வடிவு- படிக்க சுலபமான அமைப்பு, 09. உயர்ந்த தாள், அழுத்தமான கட்டமைப்பு - நீடித்திருக்க. 10. விலை ரூ.50. [குரியர் ரூ.20 - தமிழ்நாடு, ரூ.35 - மற்ற மாநிலங்கள்] 11.ஐந்து புத்தகங்களுக்கு மேல் வாங்கினால் 10 விழுக்காடும், 12. Payment through D.D. drawn on "Vayusutha Publication" payable atNew Delhi, or by Money Order to "Vayusutha Publication" to our address given below 13. No V.P.P. இத்தனையும் ரூ. 50க்கு இதுவரை வெளிவராத அம்சங்கள் பல கொண்ட எங்கள் இப்புத்தகத்தினை படித்து மகிழ்ந்து, அனுபவித்து, மற்றவர்களும் பலன் அடைய தாங்கள் உதவுங்கள்.
Address for correspondence : 82-B Saraswati Kunj 25, I.P.Extention, Delhi 110 092 mail us at vayusutha@yahoo.co.in The book is NOW available at the following address: 01. Bawani Book Centre, Station Road, West Mambalam, Chennai - 600 033 02. Jayalakshmi Indological Book House, 6-Apparwwamy Koil Street, 03. Ganapathy Book Centre, 19, 7th Street, Ram Nagar, Nanganallur, 04. Samata Books, The Personal Book Shop, No.10 Congress Buildings 05. Kalaimagal Traders, No.5, Poonambala Vadhyar Street, 06. Pustak Mandir, 155-MG Road, Puducherry - 605 001 :: 07. Sri Markendeya Book Depot, 48, Kumbeswarar Sannathi, 08. Murasu Books, Near Old Bus Stand, Thanjavur - 613 001 :: 09. Syamala Book Depot, 150- S N High Road, Opp Poompugar, 10. Vedantha Book House, 96,6, Chamrajapet, Bangalore - 560 018 11. Book Shop, Opp to Sri Genash Mandir, Near Rama Mandra, 12. Sri Prasanna Veeranjaneya Temple, Mahalakshmi Layout, பத்திரிகைகளின் மதிப்புரை: ஸ்ரீ ஆஞ்சநேயர் பெருமை அறியாதவர் யாரும் இலர். ராம்பிரானால் பெரிதும் போற்றப்பட்ட அறிஞர். தொண்டின் தூய உரு. தமிழகத்திலும் நாடு முழுவதும் மற்ற இடங்களிலும் ஆஞ்சநேயருக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன. ஆஞ்சநேயரை வழிபட ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம்,ஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோ த்திரம் ஆகியவை உள்ளன. சம்ஸ்கிருதத்தில் உள்ள இவைகளை அர்த்தத்துடன், ஒலி பிறழாமல் சொல்ல, துதித்து வணங்க இந்த நூல் பெருமுயற்சியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதச் சொல், அதற்கான தமிழ் எழுத்தில் அர்த்தமும் உள்ளது மிகவும் சிறப்பானது. ஸகஸ்ரநாமத்தில் 805 முதல் அடுத்துவரும் நாமாவளியின் அர்த்தம் இதோ: பாபங்கள் அற்றவர், தர்மத்தின் காரணமானவர், அறத்தைக் கடைப்பிடிப்போருக்கு தெரிய வருபவர், உண்மை இவரே, வாய்மை வெல்லும்படி செய்பவர், மங்கள மூர்த்தி, சுந்தரவடிவினர் என்று இப்படியே தொடர்ந்து படிக்கும் போது மனம் மிகவும் மகிழும். வெற்றி வாகை சூடிய அனுமனை வணங்குவோர், அதன் அர்த்தம் புரிந்து படித்தால் எவ்வளவு பெருமை. இதை உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. அனுமனை வழிபடும்
அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டிய, படித்து தெளிவு பெற வேண்டிய நல்ல படைப்பு. 'சொல்லின் செல்வன்' 'நவவியாகரண பண்டிதன்' 'சமய சஞ்ஜீவி' உள்ளிட்ட பல திருநாமங்களைக் கொண்ட அனுமன், ராம நாம மகிமையை உலகறியச் செய்தவன். ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழ்பாடும் ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் (ஆயிரம் திருப்பெயர்கள்), ஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோ த்திர சதம் (108 பெயர்கள்) முதலானவற்றைக் கொண்ட இந்த நூல் ஓர் அரிய முயற்சி. ஒவ்வொரு நாமத்துக்கும் தமிழில் பொருள் விளக்கமும் (மூலம் சமஸ்கிருத எழுத்திலும்) ஸஹஸ்ர நாமாவளியும் அச்சிட்டுள்ளனர். சத நாமாவளியில் ஒவ்வொரு நாமத்துக்கும் தமிழில் விரிவான விளக்கம் எழுதியுள்ளது வெகு அழகு. 'இந்த நாமங்களைப் பொருள் உணர்ந்து படிப்பதால், பக்தர்களிடம் ஓர் அனுபவத்தையே
உற்பத்தி செய்யக் கூடிய வலிமை உள்ளது என்பது புரியும்' என்று முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளது அனுபவரீதியான உண்மை. ஸ்ரீராமரின் துயர் தீர்த்தவர் ஆஞ்சநேயர் - ஸ்ரீராமநாம மகிமையை அனைவருக்கும்
போதிக்கும் குருநாதர். ஸ்தோத்திரப்பிரியரான ஆஞ்சநேயரைத் துதிப்பதன் மூலம் துயரங்கள்
யாவும் நீங்கும். ஸ்ரீஹநுமத் ஸஹஸ்ரநாமம், தமிழ் மற்றும் சமஸ்கிருத எழுத்தில்,
முழுமயான அர்த்ததுடன் தொகுக்கப்பட்டுள்ளது. முதியவர்களும் படிக்கும் வகையில் பெரிய
எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் மங்களம் அளிப்பவரும் வாயு பகவானின் புத்திரருமான ஸ்ரீஹனுமன் பலம்
வாய்ந்தவர் மட்டுமல்லர். ஆபத்பாந்தவர். ஆநாதரக்ஷகர். அவரைத் துதிக்கத் திதிக்க
ஆனைத்து அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். ஸ்ரீஹனுமனை வழிபட ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்,
நாமாவளி, அஷ்டோத்ரம் எனப் பலவிதமான துதிகள் உள்ளன. ஸம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் அவற்றின் விளக்கவுரையுடன் இந்நூல் வெளியாகி உள்ளது. 'எங்கெல்லாம்
இராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தர்களை ரக்ஷிக்க நான் அங்கிருப்பேன்' என்கிறார்
ஸ்ரீஹனுமான். அப்படிப்பட்ட ஹனுமனை வழிபட ஏற்ற நூல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... ஓம் ஸூராய நம: தைரியமாகக் காரியத்தில் இறங்கி, பயமில்லாமல் இருந்தால்தான் ஜயம்
அடைய முடியும். பயமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்யக்கூடிய திறமை ஸூரனிடம் இருக்கும். ஆஞ்சநேயரிடம் பயம் என்பதற்கு இடமேயில்லை. ஸூராதி ஸூரர் அவர். அவரை ஸ்மரித்த
மாத்திரத்தில் நம் பயமெல்லாம் விலகிப் போய் விடும். அவருக்கு நமஸ்காரம்.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |