TAMIL SANGAM - RAMANATHAPURAM
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
மூவந்தரும் அற்றுச்
சங்கமும் போய் பதி
மூன்றொரு எட்டுக்
கோவேந்தரும் அற்று
மற்றொரு வேந்தர்
கொடையும் அற்றுப்
பாவந்தர் காற்றில்
இலவம் பஞ்சாகப்
பறக்கையிலே
தேவேந்திரத் தாரு ஒத்
தாய் ரகுனாத
செய துங்கனே
-படிக்காசுப் புலவர்
1. ஆண்டுதோறும் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த அறிஞர்களுக்கும், ஆதரவு அளித்த புரவலர்களுக்கும் நினைவு விழாக்களை நடத்துவது.
2, பள்ளி, கல்லூரி மாணவர்களது மொழித்திறனை வளர்க்கும் வண்ணம் அவர்களுக்கு மாலை நேரங்களில் அவர்களுக்கு இலவச இலக்கண, இலக்கிய வகுப்புக்களை நடத்தி உதவுவது.
3. தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க வேண்டும் என்ற மகா கவி பாரதியின் கனவை நனவாக்க தமிழர்தம் அன்றாட வாழ்வில் தமிழுக்குச் சிறப்பிடம் வழங்கப் பணியாற்றுவது.
4. நகரின் நடுவில் தமிழ்ச் சங்கத்திற்குஎன ஒரு கட்டிடம் எழுப்பி் அதில் நூலகம் அமைத்தல்
5. தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து புலமையும் பெருமையும் பெறுவதற்கு உதவும் வகையில் தமிழ்க் கல்லூரியும் தமிழ்ப் பயிற்சிக் கல்லூரியும் நிறுவுதல்
6. தமிழில் ஆண்டுதோறும் வெளியிடப் படும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர்களுக்குப் பரிசும் பாராட்டிதழும் வழங்குதல்.
7. ஆண்டுத் தேர்வுகளில் மாவட்டத்தில் முதன்மை நிலைபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்குப் பரிசு வழங்குதல்.
போட்டிகள் நடத்திப் பரிசுகளும், பாராட்டிதழ்களும் வழங்கி அவர்களின் மொழிப் பற்றை ஊக்குவித்து வருகிறோம்.
இத்துடன் அனைத்து மக்களுக்கும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காக நமது இலக்கிய விழாக்களில் கவிஅரங்கம், கருத்தரங்கம், உரைஅரங்கம், நூல் வெளியீட்டரங்கம் ஆகியவைகளை அமைத்து வழங்கி வருகிறோம்